சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ம் வருடம் ஜனவரி 1ம் தேதியும், பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும் தொடங்கும். இதற்கான தேர்வு அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது என சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்த தோ்வுகளுக்கான அதிகாரபூா்வ தேதி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்புகளுக்கான எழுத்துத் தோ்வுகள் 2023 பிப்ரவரி 15 முதல் துவங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள், வெளியிலிருந்து வரும் மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும். 10ம் வகுப்பு செய்முறை தோ்வுகள், உள்ளக மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும் என்று அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில் செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்னவாகும்..? எனும் கேள்விக்கு, “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு 2வது முறையாக வாய்ப்பளிக்கப்படாது. ஆகவே தேதிகளை சரியாக குறித்து வைத்துக்கொண்டு, திட்டமிட்டபடி செய்முறைத் தேர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 2023ல் நடைபெறும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 40 % அளவிலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 30 சதவீதமும் திறனறி அடிப்படையிலான கேள்விகள் இடம்பெறும்”என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.