Categories
சினிமா தமிழ் சினிமா

மனசுல நின்னுட்டாரு விஜய்…. உருக்கமான செயலால் பாராட்டும் ரசிகர்கள்….!!!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்தார். கடந்த மாதம் நிர்வாகிகளை சந்தித்த அவர் ஒவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என உறுதி தெரிவித்தார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். வாரிசு படம் வெளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  விஜய்யை பார்க்க அங்கு ஒரு மாற்றுத் திறனாளி ரசிகர் வந்திருந்தார். அவரை விஜய் தனது கைகளில் தூக்கி வைத்திருப்பது மாதிரியான போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய்யின் இந்த உருக்கமான செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |