Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வந்து 20 வருசமாச்சு… வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா… கொண்டாடும் ரசிகாஸ்..!!!!

திரிஷா திரையுலகிற்கு வந்து 20 வருடங்களான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் திரிஷா. இவர் முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் தான் முதலில் வெளியாகி ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டதோடு அவரின் அழகும் அதிகரித்து வருவதாக ரசிகர்கள் பாராட்டினார்கள்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், சதுரங்க வேட்டை2, ராம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றது. மேலும் தொடர்களிலும் நடிக்கின்றார். அதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் திரிஷாவின் 20 வருட திரை பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் அவரின் காமன் டிபி என்ற பொதுவான போஸ்டர்களை ரசிகர்கள் ஷேர் செய்து ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |