Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை ஒதுக்காமல் சாப்பிடுங்க… உடலில் சர்க்கரை அளவை சீரா வச்சிக்கோங்க…!!

கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு.

உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும்.

உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு ஏற்பட்டால் கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

தோல் நோய் குணமாக கறிவேப்பிலையை மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் பூசி வர தேமல் போன்ற தோல் பிரச்சினைகள் சரியாகும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க முடியும்.

முடியை கருமையாக்க வாரத்திற்கு ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை அரைத்து சாறெடுத்து அதனுடன் சீயக்காய், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும்.

Categories

Tech |