புளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஓன்று சீறிக்கொண்டு சென்று விபத்திற்குள்ளானது.
அமெரிக்காவின் புளோரிடாவில் கார் பந்தயம் நடைபெற்றது. 12 கார்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தின் போது போட்டியில் வளைவு பாதையில் வேகமாக சுற்றி வந்த கார்களுள் முதலில் சென்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு காரில் மோத அடுத்தடுத்து 3 கார் மோதிக்கொண்டது.
இதில் இடித்து கொண்ட சிவப்பு நிற கார் மட்டும் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி இடதுபுறமாக சீறிக்கொண்டு சென்று மைதானத்தின் நடுவே இருந்த திட்டு போன்ற அமைப்பின் மீது மோதி காற்றில் பறந்து சென்று அங்கிருந்த மற்றொரு காரின் மீது மோதி சுழன்று நேராக விழுந்தது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பார்த்தனர். இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது