Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலைமை மோசமா போகுது…! ரம்மியை உடனே தடை செய்யுங்க… அமைச்சருக்கே போன் போட்ட சரத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே…

நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் கிட்டயே சொன்னேன். சீக்கிரமா தடை விதிங்கன்னு சொன்னேன். இப்போ தான் சட்டம் இயற்றனும்னு சொல்லி இருக்காங்க. ரம்மி விளம்பரத்தில் நான் நடிச்சது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி.

புரிஞ்சுதா.. அப்போ அவசர சட்டம் வந்திருந்தால், சரத்குமார் நடித்திருக்க மாட்டார்.  சரத்குமார் நடிச்சுட்டாரு என்றது மட்டும்தான் மையமா தெரியுது உங்களுக்கு…  ஏன்னா மத்தவங்க எல்லாம் நடிச்சது தெரியல. இங்க ஒருத்தர் கிடைக்கணும்…  அவரை போட்டு வாங்கணும்.. நான் கூட சிகரெட் பிடிக்கிறது இல்லை.

எம்ஜிஆர் படம் பார்த்து பார்த்து வந்து சிகரெட் பிடிக்காம தான் இருந்தேன. எங்க அப்பா சிகரெட் பிடிக்கல,  நானும் பிடிக்கல. அது பழக்கமா வரும் ? ஒருத்தங்க வாயில வச்சு சிகரெட்டை வச்சு  கொளுத்த முடியுமா ? ஒருவரின் வாயில் ட்ரிங்க்ஸ்ஸை போய் ஊத்திற  முடியுமா ?  நான் சொன்ன உடனே தொண்டர்கள் கேக்குற மாதிரி இருந்தா…  நான் பல தேர்தலில் வெற்றி பெற்று இருப்பேன் என தெரிவித்தார்.

Categories

Tech |