Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித் யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல”…. பிரபல இயக்குனர் எச். வினோத் அதிரடி பேட்டி…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எச். வினோத் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிந்துதான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் பண்ணுகிறார்கள்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வேன் என்று அஜித் நம்பிக்கை கொடுத்து யாரையும் ஏமாற்றவில்லை. இது மார்க்கெட்டிங் உலகம். ஒரு குண்டூசி விற்பனை செய்ய வேண்டும் என்றால் கூட அதற்கு கண்டிப்பாக மார்க்கெட்டிங் தேவை. நான் அஜித் சாரின் கருத்துகளில் இருந்து சற்று முரண்பட்டவன். இருப்பினும் ஒருவரின் கொள்கை முடிவில் தலையிடுவதற்கு நாம் யார்? என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் எச். வினோத்தின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |