உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இன்று(14.12.22) காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் CM தலைமையிலான ஆட்சியில் புதிய சூரியனாக உதயநிதி ஸ்டாலின் ஒளிவிடுகிறார் என்று திமுக MLA TRB ராஜா புகழ்ந்துள்ளார். இதுபற்றி அவர், விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள். அவர்களின் கோரிக்கைகளைத் உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு ஏற்றவர் உதயநிதி. இளைஞர்களே காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.