தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா ரயிலில் பார்த்திருக்கிறோம். நீங்களும் ரயிலில் போய் இருப்பீர்கள். ஒரு துண்டை போட்டுக்கொண்டு ரயிலில் பயணம் செய்வார்கள். யாராவது முதலமைச்சர் ரயிலில் வந்த மாதிரி பார்த்து இருக்கிறீர்களா? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை.
அதுவும் சரியாக அங்கே சன் டிவி நேரடியாக வந்து கொண்டிருக்கிறது. அவர் வேற உள்ளே உட்கார்ந்து கொண்டு இது ரயிலா? விமானமா ? வீடா ? நாம் வேற ரொம்ப நாள் முன்னாடி ரயில் படித்து சென்னைக்கு வந்தோம். இப்படி பண்ணி வைத்திருக்கிறார்களே என்று… அதை வேற விளம்பரம் செய்யுறாங்க. முதலமைச்சர் அவர்கள் சாமானிய மனிதனைப் போல ரயிலில் போகிறார் என்று…
சாமானிய மனிதனை போல ரயிலில் போனார் என்றால், ஸ்லீப்பர் கிளாஸில் பெட்ஷீட், தலவாணி எடுத்துட்டு போய், சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது ? மூட்டைப்பூச்சி இருக்கா ? கழிவறை எல்லாம் கழுவுகிறார்களா ? நல்லா வந்து பார்க்கிறார்களா என்று ? ஏனென்றால் 99.9% மக்கள் போவது சாமானிய கம்பார்ட்மென்ட்.
ஒரே ஒரு கம்பார்ட்மென்ட்டை தனியாக எடுத்து, அந்த ஒரே ஒரு கம்பார்ட்மெண்டில் நீங்கள் மட்டும் உட்கார்ந்து கொண்டு கண்ணாடியை பார்த்து உங்கள் அழகை ரசித்துக் கொண்டே வந்தீர்களா தென்காசி வரைக்கும்… இதையெல்லாம் வேற நம்மை கோமாளிகளை போல இதையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சன் டிவியில் செய்தி போடுகிறார்கள். இதையும் பார்க்க வேண்டிய அவலம். திராவிடம் மாடல் அரசுக்கு இதுவும் உதாரணம் என தமிழக அரசை விமர்சித்தார்.