Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான மயோனைஸ்… வீட்டிலேயே சுலபமாக நீங்களே செய்யலாம்!

சாண்ட்விச், தந்தூரி, கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், சமோசா, கட்லெட் என எந்த உணவைச் சாப்பிட்டாலும் கூடவே ஒரு வெள்ளை நிற க்ரீம் வைக்கப்படும், அதுதான் மயோனைஸ். இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத சைடிஷ்ஷாக உள்ளது. இந்த மயோனைஸ் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

ஆலிவ் எண்ணெய் – ஒரு கப்,
முட்டை – 2,
கடுகுத் தூள் – 1 ஸ்பூன் ,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்,
உப்பு – சிறிதளவு,
வினிகர் – ஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, வினிகர், கொஞ்சம் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கலக்குவம். இவ்வாறு செய்வதால் முட்டை கலவை கெட்டிப் பதத்திற்கு வரும். பின் இறுதியாக மொத்த எண்ணெயையும் ஊற்றி நன்கு அரைத்தால் கெட்டியான பதத்தில் மயோனைஸ் ரெடி. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்தும் கொள்ளலாம். சுவையான மயோனைஸ் ரெடி!

Categories

Tech |