கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகளை வசூலிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். நலன் கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். தொழில் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் ஏதும் எடுக்க வேண்டாம். இன்று உறவினர் வகையில் உங்களுக்கு சிறு மன சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும்.
முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது தான் ரொம்ப நல்லது. இன்று வாழ்க்கை சக்கரத்தில் நீங்கள் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று மாணவர்களுக்கு நிதானமான போக்கையே காணப்படும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் நீங்கள் எடுக்கக்கூடும். அதேபோல தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடின பாடங்களைப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணி நீங்கள் செய்யும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வேறு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை-: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்