Categories
அரசியல் மாநில செய்திகள்

“எங்க தயவு இல்லாம ஜெயிக்க முடியாது”… பகல் கனவு காணாதீர்கள்….. பாஜக அண்ணாமலைக்கு சவால் விட்ட இபிஎஸ் டீம்….!?!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம். பாஜக நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டல் வாக்குகள் பிரிந்து செல்லாது.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் நல்லது. உங்களை தூக்கி சுமந்து நாங்கள் தான் மோசமாகி போனோம். அதன் பிறகு அதிமுக தயவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற அண்ணாமலையின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை விட்டு பாஜக பிரிந்து சென்று விட்டால் மீண்டும் அதிமுக வலுப்பெறும் என்று கூறினார். இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கட்சியை விட்டு நாம் விலகினால் தமிழகத்தில் வெற்றி பெறுவோம் என்றும், அவர்கள் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |