இந்த குறியீட்டில் கேஸ் முன்பதிவு செய்தால் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மக்கள் கேஸ் புக் செய்ய வேண்டும் என்றால் கேஸ் கடைக்கு சென்று புக் செய்து வந்தனர். ஆனால் தற்போது Paytm உள்ளிட்ட பணபரிவர்தனை செயலிகள் மூலமாக முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் Paytm மூலம் முன்பதிவு செய்தால் நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது 4 கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் GAS 1000 என்ற ப்ரோமோகோடைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம்.
அதேபோல் freeGAS சலுகையின் குறியீட்டில் முன்பதிவு செய்தால் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் யெஸ் பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து paytm மூலம் காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் 30 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகளை பெற வேண்டுமென்றால் முன்பதிவு செய்யும்போது GASYESCC என்ற குறியீட்டை கொடுக்க வேண்டும்.