நாடாளுமன்றத்தில் பி.எம் கிசான் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்தார். அப்போது கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 13-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு தவணையின் போதும் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப் படுகிறது. மேலும் 13-வது தவணை தொகையானது ஜனவரி மாதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பி.எம் கிசான் திட்டத்தில் சில வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதால் அவர்களை கண்டறிந்து திட்டத்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.