Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு.. தடைகள் விலகி செல்லும்.. வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும்..!!

 மகரம் ராசி அன்பர்களே..!  இன்று வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். பிள்ளைகள் குடும்ப பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள். தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவில் இருப்பது மட்டும் கொஞ்சம் கடினம்தான். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும். ஒற்றுமை குறையும் படியான சில சூழ்நிலைகள் அமையும்.

சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் னரே கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும். இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். இன்று  மாணவ கண்மணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள் கல்வியிலும் நல்ல தரதேர்ச்சி பெறுவர் நல்ல மதிப்பெண்களை இன்று அவர்கள் தேடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |