Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கீடு …!!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு  ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவிப்பிரமாணம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின்.

பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய நிலையில்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு பல்வேறு நிர்வாகிகள்,  பல்வேறு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |