Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..வாழ்க்கை நிலை மாறும்…நண்பர்களால் மனம் மகிழும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாளாகவே இருக்கும். ஏற்ற இறக்கமான வாழ்க்கை நிலையும் மாறும். இன்று எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதரர் வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் வரக்கூடும். உணவு கட்டுப்பாட்டில் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

பிற விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தால் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம்.பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் என்று செய்ய வேண்டாம். இன்று  மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து பாடங்களை படிப்பார்கள் கல்வியில் நல்ல வெற்றியும் பெறுவார்கள் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கல்வியில் நீங்கள் அத்தை செலவிடுவது ரொம்ப நல்லது. விளையாட்டை தயவுசெய்து ஓரங்கட்டி ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானம் ஆகவே கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |