Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியலுனு சொல்லுவாங்க…! செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன்: உதயநிதி செம பேட்டி ..!!

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது கூடுதல் பொறுப்பு அவ்வளவுதான். எல்லோரின்  எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருக்கும். நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போதும் இதைத்தான் சொன்னேன். கண்டிப்பா என் மீது விமர்சனங்கள் வைப்பாங்க. சிலர் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள், அதை தடுக்க முடியாது.

அதை என் செயல் மூலமாக மட்டும்தான் செய்து காட்ட முடியும். அதற்கான பணிகளை தொடர்வேன். அதற்கு  பத்திரிகையாளர் நீங்கள் அனைவரும் உதவுங்க. என் மேல ஏதும் குறை இருந்தா சொல்லுங்க.  உங்களுடைய விமர்சனங்களை வையுங்க. அதற்கு தகுந்த மாதிரி என்னுடைய பணிகள் இருக்கும்.

கமல் சார் தயாரிப்புல நடிக்கிறதா இருந்துச்சு. இந்த சொன்ன உடனே அவர் தான் முதலில் வாழ்தினார். இந்த படம் பண்ணல. கடைசி படம் மாரி செல்வராஜ் ஆசைப்பட்ட மாதிரி ”மாமன்னன்” தான் எனது கடைசி படம். விமர்சனங்களுக்கு எனது செயல் மூலம் பதில் தருவேன். வாரிசு அரசியல் என்ற என் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் தருவேன்.

இளைஞரணி செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பதவியை பெற்ற போதும் விமர்சனங்கள் வந்தன. தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதிக்கு மினி ஸ்டேடியத்தை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் செயல்படுவேன். என்னால் முடிந்த அளவுக்கு கொடுக்கப்பட்டபொறுப்பை நான் சரிவர செய்வேன். இப்பதான் அலுவலகத்துக்கு போக போறேன். இப்பதான் முதல் கையெழுத்து போட போறேன்.  அதை போட்டுட்டு உங்களுக்கு என்னென்ன செய்யப் போறேன்னு சொல்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |