ரஜினிகாந்த் நடித்து, தயாரித்து, கதை, திரைக் கதை எழுதி வெளியான படம் பாபா. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்தார். சென்ற 2002ம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் அப்போது வெற்றியடையவில்லை. இந்த படம் வெளிவந்து 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் பாபா படம் சென்ற 10ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து உலகம் முழுவதும் முதல்நாள் மட்டும் பாபா படம் சுமார் ரூபாய்.80 லட்சம் வரை வசூல் செய்தது. இந்த நிலையில் பாபா திரைப்படமானது ரீ ரிலீஸ் ஆகி இம்முறை மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. கடும் மழை பெய்த போதிலும் இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் வாயிலாக தமிழகத்திலும், தமிழகத்தை தாண்டியும் பாபா படம் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளதாக தெரியவந்து உள்ளது.