Categories
உலக செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட உணவு தாணிய ஏற்றுமதி… பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். இதனையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன், ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தாணிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ் உக்ரைன் உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி உணவுடன் கூடிய 550 கப்பல்கள் இதுவரை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியாகி பேச்சுவார்த்தைகளுக்கு பின் மீண்டும் தொடரப்பட்டது.

ஆனால் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மின்வெட்டு பிரச்சினைகள் ஏற்பட்டு சில உணவு தாணிய ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை  ஒடேசாவின் கருங்கடல் துறைமுகம் இயங்கவில்லை . மேலும்  மின்வெட்டு காரணமாக செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்ட பின் தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் மீண்டும் உள்ள துறைமுகங்களை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளது. உக்ரைனிலிருந்து சுமார் 238, 600 டன்கள் விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் 690,000  டன்கள் மற்ற 23 கப்பல்களில் ஏற்றப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |