பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற 21 நபர்களில் ஒருவர் ஷிவின். அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்றுள்ள பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3-ல் ஷிவின் இடம்பிடித்துள்ளார். மேலும் சில கணிப்புகள் ஷிவின் டைட்டில் வின்னராக கூட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால் அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் பிக் பாஸ் ஷிவின் நடிகர் விஜய் போல் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் போக்கிரி திரைப்படத்தில் வரும் விஜய்யை போலவே, அச்சு அசல் அப்படியே உடையணிந்து அசத்தலாக ஷிவின் நடனம் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
View this post on Instagram