கன்னிராசி அன்பர்களே..! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் சிறப்பாகத்தான் வந்து சேரும். குடும்பத்தினர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது ரொம்ப நல்லது. ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள். இன்று பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அசையா சொத்துக்களாலும் வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது ரொம்ப நல்லது. புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்படும்.பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும் இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். மாணவர்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும் நல்ல முன்னேற்றம் இருக்கும் .நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூடிய சூழலும் அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்டநிறம்: கருநீலம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்