இனி நடிப்பிலிருந்து முழுமையாக விலகி விட்டேன், மாமன்னன் தான் என்னுடைய கடைசி படம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையிள் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற பிறகு தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி பதவி பிரமாணத்துடன் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘விமர்சனங்களுக்கு என் செயல்பாடுகள் மூலம் பதில் கொடுப்பேன். ளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற போதும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகராக மாற்றுவதே என் இலக்கு’ என்றார்.