Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..விட்டு கொடுத்து செல்லுங்கள்.. காரியங்கள் சிறப்பாகவே நடக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக இன்றைய நாள் இருக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று காரியங்கள் சிறப்பாகவே இருக்கும். நவீன முறைகளை கையாண்டு தொழிலை பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இந்த விஷயத்தில் கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும், அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் கொஞ்சம் சுலபமான வேலை இருக்கும்.

அதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். அரசு வழியில் எதிர்பாராத மானியம் உதவிகளும் கிடைக்கும் நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல சந்தோஷமான சூழல் அமையும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும் கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும் அதுமட்டுமில்லை தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று ரொம்ப சிறப்பை பெறமுடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |