Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள்…விடாமுயற்சி வெற்றியாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். வாங்கல்களில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். இடம் பூமி வாங்கியதில் இருந்த தடைகள் விலகி செல்லும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை நாம் தவிர்க்கலாம்.

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிட்டும். நிதானம் மட்டும் எப்பொழுதுமே முக்கியம். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற கூடிய சூழலும் இன்று சிறப்பாகவே அமையும். இன்று காதலர்களுக்கு ஒரு பொன்னான நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |