திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் பான்கார்டில் தன் பெயரை மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
# பான்கார்டில் மாற்றங்களைச் செய்வதற்கு TIN-NSDL இணையதளம் (அ) UTIITSL-க்கு செல்லவும்.
# அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான துணை ஆவணங்களையும் இணைக்கவும்.
# இதையடுத்து பான் எண்ணை படிவத்தில் நிரப்பி, உங்களது பெயருக்கு எதிராகவுள்ள செல்லை மட்டும் டிக் செய்யவும்.
# படிவத்தில் இருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு “வேலிடேட்” என்பதனை கிளிக் செய்ய வேண்டும். பின் சப்மிட் என்பதை கிளிக் செய்யவேண்டும்.
# தற்போது இந்த செயல்முறைக்கு நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டும். நெட்பேங்கிங், டெபிட்-கிரெடிட் கார்டு, கேஷ் கார்டு ஆகியவற்றின் வாயிலாக பணம் செலுத்தலாம்.
# பணம் செலுத்திய பின், பான் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
# அந்த விண்ணப்பத்தில் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை ஒட்டி, கையெழுத்திடவும்.
# அத்துடன் மேலும் அதனுடன் தேவையான ஆவணச் சான்றுகளையும் சேர்த்து சமர்ப்பிக்கவும்.
இவ்வாறு NSDL வாயிலாக விண்ணப்பத்தை அனுப்ப விரும்பினால் நீங்கள் உங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி வைக்கவும் (அ) UDIITSL-க்கு அதன் போர்ட்டல் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பிக்கக்கூடிய நபர் இ-கேஒய்சி செய்ய வேண்டும். இதனை செய்தால் நீங்கள் கூடுதலாக எந்த வித ஆவணங்களையும் சமர்பிக்கவோ (அ) NSDL, UTIITSL க்கு விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய தேவையில்லை. டிஜிலாக்கர் (அ) இ-சைன் ஆகியவற்றை பயன்படுத்தி இ-கேஒய்சி செய்துக்கொள்ளலாம். திருமணத்துக்கு பின் பான் எண்ணை மாற்ற நீங்கள் உங்களது திருமண சான்றிதழ் (அ) திருமண அழைப்பிதழ், கணவரின் பெயர் உள்ள பாஸ்போர்ட்டின் நகல் ஆகிய ஆவணங்களை கொடுக்கவேண்டும்.