Categories
பல்சுவை

ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இப்போது ஐபோன்களில் அதிகாரப்பூர்வ 5G சேவை துவங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 5G சேவையை 2020 (அ) அதற்குப் பின் வெளியான அனைத்து iPhone மாடல்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் iPhone 12, iPhone 13, iPhone 14 மற்றும் iPhone SE போன்ற மாடல்களில் 5ஜி சேவை கிடைக்கும்.

ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவதற்குரிய வழிமுறைகள்

# உங்களின் iPhoneல் முதலாவதாக Settings பகுதிக்குள் சென்று General என்பதில் Software Update என்பதை கிளிக் செய்யவும்.

# தற்போது டவுன்லோடு iOS-16.2 என்பதனை பார்பீர்கள். பின் அதை கிளிக் செய்ய வேண்டும்.

#அடுத்ததாக  terms and conditions என்பதை படித்து விட்டு Accept என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.

# நீங்கள் இதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு உங்களின் தரவுகளை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

# கடைசியாக பதிவிறக்கம் முடிவடைந்ததும் உங்களின் notification பகுதியில் 5G status என்ற icon காண்பிக்கப்படும்.

Categories

Tech |