Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிணற்றுக்கு அருகே மது குடித்த வாலிபர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மேச்சேரி பகுதியை சேர்ந்த நவீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜாஸ்மிகா(1) என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் இருக்கும் முருகந்தொழுவு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையுடன் விஜய் மேச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை விட்டுவிட்டு விஜய் மட்டும் முருகந்தொழுவுக்கு வந்து பொது கிணற்றுக்கு அருகே மது குடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி விஜய் கிணற்றுக்குள் விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விஜயின் உடலை மீட்டனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |