சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது காட்டுக்குள் ஒரு குட்டி புலியும், சிங்கக் குட்டியும் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அந்த 2 குட்டிகளும் காட்டின் மத்தியில் விளையாடுவதை காணலாம். மேலும் அந்த குட்டிகள் தங்களது கால்களால் அடித்துக்கொண்டு க்யூட்டாக விளையாடுவதை வீடியோவில் காணலாம். இந்த அழகிய வீடியோ நெட்டிசன்களின் கவனம் ஈர்த்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
https://twitter.com/buitengebieden/status/1602766134247587840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602766134247587840%7Ctwgr%5E0a04be7e0107ce6f7225444699f824d9c836fe2d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Famazing-viral-video-of-a-lion-cub-and-baby-tiger-playing-together-424247