தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ? விட்டோம் பாருங்க… நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம். என்ன நடக்குமோ ? காலங்காத்தால…
யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… அதுவும் கரெக்ட்டா அங்கேயும் சன் டிவி லைவ்ல வந்துட்டு இருக்கு. அதை வேற அட்வர்டைஸ்மென்ட் முதலமைச்சர் அவர்கள் சாமானிய மனிதனைப் போல டிரெயின்ல போனாரு. சாமானிய மனிதனைப் போல டிரெயின்ல போனாங்கன்னா…
ஸ்லீப்பர் கிளாஸ்ல பெட்ஷீட்ட, தலவாணி எடுத்துட்டு போயி, சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு ? மூட்டைப்பூச்சி இருக்கா ? பாத்ரூம் எல்லாம் கழுவுறாங்களா ? நல்லா வந்து பாக்குறாங்களான்னு கேக்கணும். ஒரே ஒருகம்பார்ட்மெண்ட்டை தனியா எடுத்து, அந்த ஒரே ஒரு கம்பார்ட்மெண்ட்ல நீங்க மட்டும் உட்கார்ந்து கண்ணாடிய பாத்து உங்க அழக ரசிச்சிட்டு வந்தீங்களா ? தென்காசி வரைக்கும்… இதையெல்லாம் வேற நம்மையெல்லாம் கோமாளிகள் போல இதையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சன் டிவில நியூஸ் வேற போடுறாங்க…
சேகர் பார்க்கணும் தான் இதுல உச்சகட்ட காமெடி. ரொம்ப திட்டிடிங்கனா திடீர்னு சாமிக்கு மாலை போட்டு வேட்டி கட்டிடுவார். அப்படின்னு பார்த்து நம்ம வேற திட்ட முடியாது. ஐயோ… அண்ணே வேற, கோவிலுக்கு போறாங்க. அதான் சேகர்பாபு அண்ணனுக்கு சொல்லலாம் இருக்கேன். உண்மையாலுமே நீங்க ஆன்மீகத்தை நம்புறீங்கன்னா, தயவு செய்து அந்த துறையிலிருந்து வெளியே வந்திடுங்க, நாங்க திட்ட மாட்டோம்.
ஆனால் எதிர்க்கட்சி திட்டுவான்னு தெரிஞ்ச உடனே, மாலையை போட்டுறீங்க எங்களால திட்டவும் முடியல. அதனால சேகர்பாபு அண்ணனுக்கு எங்களின் அன்பான வேண்டுகோள், நிறைய தவறு பண்றீங்க. கேள்வி கேட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. ஐயப்ப பக்தனா இருக்கீங்கன்னா ஒரு கடினமான வார்த்தையை பயன்படுத்தக் கூடாதுன்னு எங்களுக்கு ஒரு மரபும் இருக்கு என தெரிவித்தார்.