நாடாளுமன்றம் குளிர் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. தனஞ்சய பிம்ராவ் மஹாதிக், நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் அளவு பற்றி கேட்டார். இதற்கு மத்திய பெருநிறுவன விவகாரத் துறை இணை அமைச்சரான ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது, ” சென்ற 15 வருடங்களில் இந்தியாவில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பல்வேறு பரிமாண வறுமைக்கோடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருப்பதாகவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு ஏற்ப வறுமைக் கோடு புள்ளி விபரம் மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதி ஆயோக்கின் பல்வேறு பரிமாண வறுமைக் கோடு குறியீட்டில் நாட்டில் 25.1 % பேர் பல பரிமாண வறுமையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்திய மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் 32.75 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8.81 சதவீதமும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.