தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் நடப்பாண்டில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஒரே வருடத்தில் 3 ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது இந்திய ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்படும் WWE ரெஸ்லிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அதாவது ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் Drew Mclntyre என்ற மல்யுத்த வீரர் இந்தியாவில் ரெஸ்லிங் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ட்ரூவுடன் சேர்ந்து நடிகர்கள் ஜான் ஆபிரகாம் மற்றும் கார்த்தியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகர் கார்த்தி ட்ரூவுடன் மோதுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கான விளக்கமும் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் நடைபெறும் ரெஸ்லிங் நிகழ்ச்சியின் தமிழக விளம்பர தூதராக நடிகர் கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை தான் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Ready to take your #WWE Action up a notch 🔥
Catch 100% Pure Sports Entertainment LIVE, every week, only on the #SonySportsNetwork 📺@WWE
@WWEIndia@Karthi_Offl#WWEIndia #RAW #NXT #Smackdown pic.twitter.com/Lzoe8t7WaP— Sony Sports Network (@SonySportsNetwk) December 14, 2022