Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கு…. இன்ஜினியருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு எஸ்.ஆர் வெங்கடேஷ் என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வண்டிசோலை ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்றுள்ளது. அதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவிக்க வெங்கடேஷ் குன்னூரில் வசிக்கும் ஒப்பந்ததாரர் பாலனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து பாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலன் வெங்கடேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடேஷை கையும், களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன் வெங்கடேசுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Categories

Tech |