Categories
உலக செய்திகள்

இனி நாங்கள் கொரோனா பாதிப்புகளை பதிவு செய்ய மாட்டோம்…. சீனா அதிரடி முடிவு….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  பாதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.  இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை அரசு முறையாக பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “திடீரென்று பாதிப்புகள் அதிகரித்ததால் அவற்றை மருத்துவமனைகளில் முறையாக பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் சோதனைக்கு வருபவர்களுக்கு பெரிய அளவில் சோதனைகள் செய்ய வேண்டும் . இதனால் இனி அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை  பதிவு செய்ய போவதில்லை” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories

Tech |