மத்திய பிரதேச மாநில அரசியலில் தீடிர் திருப்பமாக மாநில ஆளுநரை முதல்வர் சந்திக்க இருக்கின்றார்.
மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மத்தியபிரதேச மாநில ஆளும் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தன்தோனை இன்று சந்திக்கிறார் முதல்வர் கமல்நாத் சந்திக்கின்றார். தற்போதைய சூழலில் மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.