Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணெய் குளியலுக்கு சிறந்த எண்ணெய் இதுவே .. இது மட்டுமே..!!

கோடையில் ஏன் நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.? எப்படி குளிக்க வேண்டும்.? இதனால் என்னவெல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.? எந்த எண்ணெய் நல்லது இது போன்ற பல வியப்பூட்டும் உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த குறிப்பை படியுங்கள்..!

நமது நாடு ஒரு வெப்பமான நாடு என்பதால், தாங்கமுடியாத வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது தோல் தான். அதுவும் வெயில் காலங்களில் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல்  நமது உடலில் சூடு சம்பந்தமான பிரச்சனைகளான கண் எரிச்சல், நீர் குத்தல், மலச்சிக்கல் மற்றும் மஞ்சள் காமாலை இப்படி பல  ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனைகளை போக்கும் எளிதான வழி என்று பார்த்தால் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது தான். நம் முன்னோர்கள் அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளித்து வந்ததால்தான்  ஆரோக்கியமாகவும் இருந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை மாதம் ஒரு முறையாவது எண்ணெய்  தேய்த்துக் குளிப்பது என்பது மறைந்து, இன்று தீபாவளிக்கு தான் எண்ணெய்  தேய்த்து குளிப்பது என்றாகி விட்டது.

அதிலும் சாஸ்திரத்திற்கு என்று ஒரு சொட்டு வைத்து குளிப்பவர்களும் உண்டு. இதனால் எவ்வளவு நன்மைகளை இழக்கிறோம் என்பது நமக்கு தெரியவில்லை. உண்மையில் நோயற்ற வாழ்விற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் என்பது மிக அவசியம். அழகும் ஆரோக்கியமும் கொட்டிக்கிடக்கும் எண்ணெய் குளியலில் முக்கியத்துவத்தை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக சிரசாசனம் செய்யும் பொழுது தலைப் பகுதிக்கு அதிக ரத்தம் ஓட்டம் எடுத்து செல்லப்பட்டு மூளைப்பகுதி எப்படி பல படுகிறதோ, அதே போன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகி உடல் உறுப்புகள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். முக்கியமாக உடல் வெப்பத்தை சீராக பராமரிக்கும் பண்பு எண்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

அதே போன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பொழுது, தலைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, அடர்த்தியாக வளரும்.  பொடுகு தொல்லையும் இருக்காது. முன் தலையில் வழுக்கை விழாது. முக்கியமாக நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.

அதுமட்டுமல்ல உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடலுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். நியாபக சக்தி அதிகரிக்கும். அதுவும் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் பொழுது, கண்கள் சிவந்து போய் இருக்கும். இவர்கள் கண்டிப்பாக வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக, மிக அவசியம்.

இதனால் பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும். அதேபோன்று தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். கோடை காலத்தில் வெயிலில் செல்ல வேண்டிய நிலை இருக்கும், அப்பொழுது தலைமுடி வெப்பத்தால் வறண்டு போய்விடும். இதற்கு எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இதற்கு வாரத்தில் ஒருமுறையாவது காய்ச்சிய எண்ணெய்யை  தலையில் நன்றாகத் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறிய பின்பு தலைக்கு குளிக்கவேண்டும்.

பொதுவாக எண்ணெய் குளியல் என்பது தலைக்கு மட்டுமல்லாமல், உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் உள் உறுப்புகளுக்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கும். மேலும் உடலை மென்மையாக வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் மூட்டு இணைப்புகளில் உண்டாகும், தேய்மானத்தை குறைக்கும். வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம். மேலும் உடலில் எண்ணெய்யை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் நீக்கிவிடுகிறது.

இதனால் உடலில் உள்ள உறுப்புகள் சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது. அதேபோன்று உடலில் ஏற்படும் சூடுதான் பல்வேறு நோயை உண்டாக்குகிறது. உள்ளுக்குள் உஷ்ணம் அதிகமாகும்போது, வைரஸ், இன்ஃபெக்ஷன், காமாலை, அல்சர், காய்ச்சல், வயிற்று வலி, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றது. மேலும் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலங்களில் ஏற்படுவது இயல்பு. இவை அனைத்து பிரச்சனைகளுக்கும் போக்கும் வல்லமை எண்ணெய் குளியலுக்கு உண்டு.

எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது..!

வெதுவெதுப்பான நல்ல எண்ணெய்யை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். பின்பு உடல் முழுவதும் தேய்த்து விட்டு, மூட்டுகள் உட்பட நன்றாக தேய்த்து விட்டு, உள்ளங்கால்களில் கடைசியாக தேய்க்கவேண்டும். இந்த எண்ணெய் குளியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாரம் ஒரு முறை குளித்து வந்தால் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தரும்.

உண்மையில் சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான், சூரியனிலிருந்து வரும் விட்டமின் டி சத்து உடல் கிரகிக்கும். அதிலும் எண்ணெய்யை  உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும் பொழுது, நீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாக செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்கடுப்பை போக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களானது  வெளியேறிவிடும்.

முக்கியமாக வேர்க்குரு, தேமல் படை, சிரங்கு போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும். எனவே வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவை பெறும். எப்பொழுதும் ஒருவித புத்துணர்ச்சி இருக்கும். சரும வறட்சி நீங்கும் உடல் தசையை உங்களுக்கு வலிமை அளிக்கும்.

பொதுவாக தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு நல்லஎண்ணெய்யே  சிறந்தது. நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின்னர் நல்லெண்ணெய் நன்றாகத் தேய்த்து அத்துடன் குளிக்க வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக எண்ணெய் குளியலின் போது தலைக்கு சீயக்காய், உடலுக்கு பாசிப்பருப்பும் பயன்படுத்துவது நல்லது.

உண்மையில் எண்ணெய்க் குளியலை மறந்ததால் என்னவோ, இன்றைக்கு நோய்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதற்கு அறிவியல் ரீதியான உண்மையும் உண்டு என்று கூறப்படுகிறது.

Categories

Tech |