தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , NPR விவகாரத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் , சிறுபான்மை மக்கள் மத்தியில் திமுக அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மக்கள் சிறைக்கு செல்வார்கள் என்று உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு வருகின்றார்கள்.
அமைதியான மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் டெல்லியை போன்று பதற்றத்தை உண்டு பண்ண வேண்டாம். சட்டபேரவையில் ஒன்று பேசி , வெளியே சென்று வேறுமாதிரியாக எதிர்க்கட்சிகள் பேசி சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.