திமுக அமைப்புச்செயலாளர் RS.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கூட்டத்தில் திமுக எம்பியும் , திமுக அமைப்பு செயலருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தெரிவித்தார். அதே போல ஊடகத்தையும் மோசமாக விமர்சித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆதிதமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கொடுத்த புகாரில், தாழ்த்தப்பட்ட மக்கள் , பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் திமுக எம்.பி , அமைப்பு செயலாளர் பேசியுள்ளார் என்று கூறி அதற்கான வீடியோ பதிவோடு புகார் அளித்தனர்.இந்த புகாரையடுத்து ஆர்.எஸ் பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்சி , எஸ்டி சட்டத்தின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல ஆர்.எஸ் பாரதியிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.