தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கமலை வைத்து விக்ரம் என்ற பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜிடம், அவரது அடுத்த படங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், இதுபோன்ற கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள லோகேஷ், கைதி-2, விக்ரம் -2 என அடுத்தடுத்து படங்களை எடுக்க முடியும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் செட்டில் ஆகிட்டேன் என்றும் கூறியுள்ளார்.