தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் 18 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.