திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதியின் சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் தேவை என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் உதயநிதி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டார். மக்களிடையே அவருக்கு வரவேற்பு இருந்தது. 2 தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்து காட்டினார் என்றார்.