Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய புயல்…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை…. சற்றுமுன் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதால் டிசம்பர் 19, 20, 21ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |