உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பாஜக கட்சி பல்வேறு விதமாக விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜகவை சேர்ந்த கே.பி ராமலிங்கம் தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது என்றும், தற்போது புதிதாக ஒரு குரங்கு நுழைகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்ற என்ற பெயரில் உதயநிதியை கிண்டலிடித்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.
அந்த போஸ்டரில் தமிழகத்தின் அமைச்சராக பதவி ஏற்ற உபிஸ்களின் சின்னவர் உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அதன் பிறகு மக்களின் வரிப்பணம் ஒரு 1.14 கோடி ரூபாய் செலவு செய்து மெரினாவில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நடைபாதை வெறும் 13 நாட்களில் புயல் வருவதற்கு முன்பாகவே மரப்பாதை இடிந்து போன சாதனையை செய்து திமுக அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள். மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள் போன்ற வாசகங்கள் போன்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.