தமிழகத்தில் கடந்த வாரங்களில் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதற்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதும் விதமாக மேற்கண்ட நாட்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் எதுவும் நடத்தக்கூடாது. இது தொடர்பாக அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.