Categories
தேசிய செய்திகள்

வருமான வரி சேமிப்பு திட்டங்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா….? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை தாண்டி சம்பளம் வாங்கும் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். அதன் பிறகு வருமான வரி செலுத்தும் காலம் நெருங்கி வருவதால் உங்களுடைய வருமான வரியை சேமிக்க உதவும் இஎல்எஸ்எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம்.

அதன் பிறகு இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பன்முக ஈக்விட்டி ஃபண்டுகள் போல் செயல்படுவதால் பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பங்குகளின் கலவையில் முதலீடு செய்வதற்கான நெகிழ்வு தன்மையை கொண்டுள்ளது. இதில் ஒரு திட்டம் அல்லது பல திட்டங்களிலும் கூட முதலீடு செய்யலாம். ஆனால் ஒரு திட்டத்தில் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் லாக்கின் காலம் 3 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில், வரி சேமிப்பு வங்கி எப்ஃடி மற்றும் அஞ்சல் அலுவலக தேசிய சேமிப்பு திட்டம் போன்ற பிற சேமிப்புகளுக்கு 5 ஆண்டுகள் வரை லாக்கின் இருக்கிறது.

ஆனால் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டம் பல வருடங்களுக்கு நிலையான வருமானத்தை தரக்கூடிய நிலையில், கடந்த 10 வருடங்களில் 14.59 சதவீதம் அளவுக்கு சராசரியாக வருமானம் அதிகரித்துள்ளது. மேலும் நீண்ட காலம் மூலதன ஆதாயங்களுக்கு ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகவும், ஒரு லட்சத்துக்கு அதிகமான தொகையில் 10 சதவீதமாகவும் இருந்தால் வரி விதிக்கப்படும்.

Categories

Tech |