பிரபல ஜோதிடர் ஷங்கர் நாராயண் தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். அதாவது, விஜய் சங்கர் என்ற பெயரில் “தனித்திரு” என்ற குறும்படத்தில் அவர் நடித்து உள்ளார். எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருமான இயக்குநர் எஸ்.கே.செந்தில் “தனித்திரு” திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த குறும்படத்தின் பின்னணியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் பணியாற்றி உள்ளனர். எஸ்.ஆர் செந்தில்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனித்திரு திரைப்படத்தை இயக்கிய எஸ்.கே.செந்தில், அடுத்ததாக அனைத்து வயதினரையும் கவரும் அடிப்படையில் முழு நீள நகைச்சுவை படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.