Categories
உலக செய்திகள்

அட!… இவரு குடுத்து வச்சவருதா!… 50 வயதில் 24 வயது அழகியுடன் திருமணம்…. காதல் கதைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!!

பாகிஸ்தான்எ (50) நாட்டில் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் சேஷாதி (24) என்ற இளம் பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு திடீரென சாதிக் மீது காதல் ஏற்பட அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு சேஷாதியின் காதலை சாதிக் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சாதிக் பேருந்து ஓட்டும் ஸ்டைல், அவர் பேசும் விதம், பேருந்தில் போடும் பழைய பாடல்கள் போன்றவைகள் தான் அவர் மீது காதல் ஏற்பட காரணம் என சேஷாதி கூறியுள்ளார். இதனையடுத்து சாதிக் மற்றும் சேஷாதிக்கு இடையே 26 வயது வித்தியாசம் இருப்பினும் காதலின் காரணமாக திருமணம் செய்துள்ளார்கள். மேலும் இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல youtuber தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்து உள்ளார்.

Categories

Tech |