Categories
மாநில செய்திகள்

விரைவில் சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம் மிகமுக்கிய தேவை எனபதை கருதி சென்ற ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் 2வது பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வரும் கிளம்பாக்கத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதுவரையிலும் 90 சதவீதம் வரை கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் கட்டுமானத்தை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது, பொங்கலுக்கு இல்லை என்றாலும், மிக விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |