தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த பதில் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் பல விஷயங்களையும் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜனும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கட்சிக்காரன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. அதன் பிறகு தயாரிப்பாளர் கே. ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பயில்வான் குறுக்கிட்டு என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சாடினார். இதனால் தயாரிப்பாளர் கே. ராஜன் நான் உன்னை பற்றி எங்கே பேசினேன் என்று கூறினார்.
அதோடு நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்துவதோடு நடிகைகளையும் கேவலப்படுத்திட்டு இருக்க. எப்ப பாரு பெட்ரூம் பத்தியே பேசுற. இது சண்டை போடுவதற்கான இடம் இல்ல. நம்ம சண்டையை இன்னொரு இடத்தில் வச்சுக்கலாம். இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம். வேறுஆள் கிட்ட வச்சுக்க என்று ராஜன் கூறினார். இதனால் பயில்வான் மற்றும் ராஜனுக்கு இடையே மோதல் முற்றிய நிலையில் அங்கிருந்தவர்கள் பயில்வனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.