தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் நிலையில் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஷாலிடம் பிரபல ஊடகம் முதலில் வாரிசு படத்தை பார்ப்பீர்களா அல்லது துணிவு படத்தை பார்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பியது. அதற்கு நடிகர் விஷால் முதலில் வாரிசு படத்தை தான் பார்ப்பேன். அதற்கு பிறகு தான் துணிவு திரைப்படத்தை பார்ப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் விஷாலின் பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் துணிவு திரைப்படத்தை இரண்டாவதாக பார்ப்பேன் என்று சொன்னது தல ரசிகர்கள் மத்தியில் சற்று கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.